சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
சென்னை, சைதாப்பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
சைதாப்பேட்டையில் அடையார் ஆற்று ஓரப்பாதையில் கீரைத்தோட்டத்தில் பல ஆண்டுக்காலமாக தனியாரால் சுமார் 60 கிரவுண்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மழைநீர் செல்வதற்கு பெருந்தடையாகவும் , கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும் இடமாகவும் இருந்தது.
சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் துரித நடவடிக்கை மேற்கொண்டு நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை, மாவட்ட வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் மேயர் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்காக 5 லாரிகள், ஒரு பொக்ரேன், ஒரு லோடர் பயன்படுத்தப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)