ஜகார்த்தா, ஏப்.15 (டிஎன்எஸ்) இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் இன்று (ஏப்.15) திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்று புவிஇயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமத்ரா தீவில் இருந்து 640 கி.மீட்டருக்கு அப்பால் நடுக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், ரிக்டர் அளவில் 7.0 புள்ளிக்கு குறைவாகவே இருந்ததால் சுனாமி அபாயம் இல்லை என்றும் இந்தோனேசிய வானிலை மற்றும் புவிஇயற்பியல் நிறுவனத்தின் அதிகாரி ஆரிப் நுராகிம் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவில் பல மாநிலங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டது. மேலும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. (டிஎன்எஸ்)
Apr 15, 2012
* Do not use semicolon(;)