ஏப்.30 (டிஎன்எஸ்) தமிழ் சினிமாவுக்காக உலக அளவில் நடத்தப்படும் நார்வே தமிழ் திரைப்பட விழா 2012-ல் சற்குணம் இயக்கிய வாகை சூட வா திரைப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த நடிகருக்கான சிறப்பு நடுவர் குழு விருது அவன் இவன் படத்துக்காக நடிகர் விஷாலுக்கும், சிறந்த நடிகர் விருது போராளி படத்தில் நடித்த எம் சசிகுமாருக்கும், சிறந்த நடிகை விருது மயக்கம் என்ன படத்துக்காக ரிச்சா கங்கோபாத்யாய்க்கும் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த இசை அமைப்பாளர் விருது அழகர்சாமியின் குதிரை படத்துக்காக இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டுக்கான நார்வே தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் 25-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் தொடங்கியது. அருகாமை நகரமான லொரன்ஸ்கூவில் உள்ள அரங்கிலும் படங்கள் திரையிடப்பட்டன.
நேற்று முன்தினம் குறும்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. விழாவின் இறுதி நாளான நேற்று (ஏப்.29) வண்ணமயமான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் திரையுலகிலிருந்து இயக்குநர் சற்குணம், நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், தூங்கா நகரம் இயக்குநர் கவுரவ், ஆவணப்பட இயக்குநர் சுபாஷ் கலியன் , பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு, புன்னகைப்பூ கீதா, தயாரிப்பாளர் கேசவன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Apr 30, 2012
* Do not use semicolon(;)