சென்னை, ஏப்.19 (டிஎன்எஸ்) சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளின் வெற்றியை அடுத்து, சென்னையில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சட்டப்பேரவையில் இதுகுறித்து தெரிவித்த தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சிவபதி, சென்னையில் நடத்தப்பட்டு வரும் சென்னை ஓபன் டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளின் வெற்றியையடுத்து, சென்னை சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடத்தப்படும் என்று கூறினார். இதற்காக முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். (டிஎன்எஸ்)
Apr 19, 2012
* Do not use semicolon(;)