சுதாகரன் மீதான வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை, ஏப்.28 (டிஎன்எஸ்) போதைப் பொருள் வைத்திருந்ததாக, சுதாகரன் உள்ளிட்டோ ர் மீது தொடரப்பட்ட வழக்கில், திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணையை, மே 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது. சுதாகரனின் தி.நகர் வீட்டில், 16 கிராம், ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில், 71 கிராம் "ஹெராயின்' எனும் போதைப் பொருள் கைப்பற்றியதாக, சுதாகரன் மீது, தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

போதைப் பொருளின் சுத்தத்தன்மை பற்றி சோதிக்க, இதன் மாதிரி அனுப்பப்பட்டது. சோதனை அறிக்கை, தில்லியில் உள்ள மத்திய வருவாய் கட்டுப்பாட்டு பரிசோதனைக் கூடத்தில் இருந்து பெறப்பட்டது.இரண்டு வழக்குகளையும் ஒன்றாகச் சேர்க்க உத்தரவிடப்பட்டிருப்பதாக, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு, திருத்தப்பட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, மே 18ம் தேதிக்கு நீதிபதி சின்னப்பன் தள்ளிவைத்தார். (டிஎன்எஸ்)

Apr 28, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.