ஊனமுற்றோருக்கு உதவி உபகரணங்கள்

 

சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)

ஊனமுற்றோருக்கு உதவி உபகரணங்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு சிறந்த வகையில் சேவை புரிந்தோருக்கு மாநில விருதுகள் ஆகியவற்றிற்கு நவம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 
ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் மாதம் 3ஆம் தேதி அனைத்து நாடுகள் ஊனமுற்றோர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் தமிழகத்தில் ஊனமுற்றோர் தினவிழா டிசம்பர், 3ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது.
 
இதனையொட்டி ஊனமுற்ற மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், ஊனமுற்றோருக்கு உதவி உபகரணங்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு சிறந்த வகையில் சேவை புரிந்தோருக்கு மாநில விருதுகள் ஆகியன வழங்கப்படவுள்ளன.

மிகச் சிறப்பாக பணியாற்றி, சுயதொழில் புரிந்து வரும் கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்கள், கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோருக்கும், மிகச் சிறந்த வகையில் சிறப்புக் கல்வி, பயிற்சி அளிக்கும்  சிறப்பு ஆசிரியர்கள், ஊனமுற்றோருக்கு மிகச் சிறப்பாக மறுவாழ்வு உதவிகளை அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள், ஊனமுற்றோருக்கு தன்னலமற்ற சேவை புரிந்து வரும் சமூகப் பணியாளர்கள், ஊனமுற்றோருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கி வரும் தொழிலதிபர்கள், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஊனமுற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி அளித்து வரும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தக்க படிவத்தில் விண்ணப்பங்கள் வருகிற 20-11-2009-க்குள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை தாங்கள் வசிக்கும் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகத்திலிருந்தோ    அல்லது ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகம், 15/1, மாதிரிப் பள்ளிச் சாலை, ஆயிரம்விளக்கு, சென்னை-600 006 என்ற அலுவலகத்திலிருந்தோ நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(டிஎன்எஸ்)

Nov 05, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 VRICHIKAVRICHIKA : Identify your strength and weakness before you accept big responsibility. I...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.