சென்னை, ஏப்.28 (டிஎன்எஸ்) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்.28) ஐபிஎல் போட்டித் தொடரின் 37-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் ஹஸ்சி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் அல்பி மோர்கெல் 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும், குலசேகரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரை அசார் மஹ்மெத் சிறப்பாக வீசியதால் பஞ்சாப் அணிக்கு வெற்றி கிடைத்தது என்றே சொல்லலாம். சென்னை அணி இப்போட்டியில் போராடி தோற்றது.
ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் மன்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். (டிஎன்எஸ்)
Apr 29, 2012
* Do not use semicolon(;)