உலகின் மிகப் பெரிய அணுமின் உற்பத்தி மையமாக கூடங்குளம் உருவாகும்: அப்துல்கலாம்

 
 உலகின் மிகப் பெரிய அணுமின் உற்பத்தி மையமாக கூடங்குளம் உருவாகும்: அப்துல்கலாம்

மதுரை, மார்ச் 23 (டிஎன்எஸ்) அடுத்த 10 ஆண்டுகளில் கூடங்குளம் மிகப் பெரிய அணு மின் உற்பத்தி மையமாக உலகில் அடையாளம் காட்டப்படும் என்று முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அப்துல்கலாம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மின் தேவையில் இந்தியா தன்னிறைவு அடைய, அணு மின் உற்பத்தி தேவை என்று உணர, கூடங்குளம் சம்பவம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

அணு மின் உற்பத்தி செய்யப்படும் முறை, அணு மின் நிலையங்களின் நம்பகத்தன்மை, அவற்றின் பாதுகாப்பு மட்டுமின்றி, 2030-க்குள் மின் உற்பத்தியில் தன்னிறைவடைய அணு மின் சக்தி எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்ந்து கொள்ள இந்த அனுபவம் உதவியுள்ளது.

இது தொடர்பாக எழுந்த விவாதங்கள், பொதுமக்களின் மனதைத் தூண்டிவிட்டு, அணு மின் சக்தியின் மூன்று கட்டச் செயல்பாடுகளையும், நிலையான எதிர்காலத்துக்கு அது தேவை என்பதையும் புரிந்து கொள்ள வைத்துள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில், கூடங்குளத்தை மிகப் பெரிய அணு மின் உற்பத்தி மையமாக உலகுக்கு அடையாளம் காட்ட இந்த அணு மின் திட்டம் பயன்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

Mar 23, 2012

Comments





Security Code
 
* Do not use semicolon(;)
மேலும் தமிழ்நாடு செய்திகள்

உங்கள் வாக்கு

நீதிமன்றம் தண்டனை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கேட்பது சட்டத்திற்கு எதிரானது?


CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

சொன்னார்கள்

மாணவர்களை பற்றி படிக்கின்ற செய்திகள் எல்லாம் பஸ்ஸில் கலாட்டா செய்தார்கள். போலீஸ் விரட்டியது... ஹாஸ்டலில் சண்டை இப்படித்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக பெருமைப்படும் அளவுக்கு ஒரு நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது அது தலைகீழாக மாறி மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற வைத்திருக்கிறார்கள்.
-கமல்ஹாசன்(திரைப்பட நடிகர்)

மற்றவர்களின் பிரச்னையில் நாம் எப்போதும் குறுக்கிடுவது இல்லை. மற்ற நாடுகளின் விவகாரங்களில் குறுக்கிட்டு ஒரு தரகராக செயல்பட இந்தியா விரும்புவது இல்லை. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது. எந்தக் காரணமும் இல்லாமல், நாம் ஏதாவது ஓர் அணியில் இணைந்து கொண்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டியதும் அவசியமில்லை. அதே நேரத்தில் மற்றொரு நாடு குறித்து தாக்கிப் பேச வேண்டியதும் தேவையில்லை.
-சல்மான் குர்ஷித்(மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2013,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.