இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா முயற்சி: பழ. நெடுமாறன்

 
 இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா முயற்சி: பழ. நெடுமாறன்

சென்னை, அக்.5 (டிஎன்எஸ்)

இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவி செய்வதாகக் கூறி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் போரின் போது தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் இழைத்த குற்றங்கள் குறித்தும், இதில் ராஜபக்சேவின் சகோதரரும் இலங்கை பாதுகாப்புத் துறை செயலருமான கோத்தபய ராஜபக்சேவின் பங்கு குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் இலங்கை படைகளின் கூட்டுத் தளபதி சரத் பொன்சேகாவிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது.

இந்த விசாரணையைத் தடுத்து நிறுத்தவும், தனது சகோதரரைக் காப்பாற்றவும் இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.

இதற்காக அனுப்பப்பட்ட தூதர்கள் டெல்லியில் பிரதமரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாக செய்திகள் கிடைத்துள்ளன.

இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற இந்திய அரசு உதவுவது தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல. மனித நேயமற்ற செயலும் ஆகும்.

ஏற்கெனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு மீது கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தோற்கடிக்க இந்தியா வரிந்துக்கட்டிக் கொண்டு செயல்பட்டது.

இப்போதும் அதேபோல செயல்படுமானால், தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும்.

இவ்வாறு பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

(டிஎன்எஸ்)

Nov 05, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

 MAKARAMAKARA : It would be a good day for students if they learn to look for facts in hand...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

சொன்னார்கள்

"சென்னையில் 2,800 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 40 சாலைகளில் உள்ள குண்டும் குழிகளும் தார்க்கலவைகள் கொண்டு 2,500 சதுர மீட்டர் அளவிற்கு சுமார் ரூ.3 லட்சம் செலவில் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது."
-மா.சுப்பிரமணியம் (சென்னை மேயர்)

"மத்திய கேபினட் அமைச்சர்களின் கடந்த 3 ஆண்டு (2006 - 09) பயணச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகம் என்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி. சமூகநல ஆர்வலர் ஒருவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமைச்சரவைச் செயலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது."
-சு.வெங்கடேஸ்வரன் (கட்டுரையாளர்)

"மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாட ஒட்டுமொத்தத் தடை என்பதற்குப் பதிலாக, வேறு மாற்று யோசனைகளைச் சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் பரிசீலித்து, ஒரு சமரசத் தீர்வு காண முயலுவது, விளையாட்டில் ஆர்வம் மிக்க இளைஞர்களுடனான உரசலைத் தவிர்க்க உதவும்."
-உ.ரா.வரதராசன் (கட்டுரையாளர்)

அதிக மறுமொழிகள் பெற்றவை
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.