சென்னை, மே 2 (டிஎன்எஸ்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மே 2) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் உள்பகுதியில் சில இடங்கள், தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யலாம். சராசரி வெப்பம் 97 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
May 02, 2012
* Do not use semicolon(;)