இந்தக்கால மாணவர்கள் பரீக்ஷை வரும் முன் மிகவும் டென்சன் ஆகி விடுகிறார்கள்.
எங்கள் ரேய்க்கி கிளினிக்கில் மார்ச் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை பல மாணவர்கள் தங்கள் தாயாருடன் வந்து தங்கள் ஞாபக சக்தியைத்தூண்டிக்கொள்ளவும் படித்தவை மறக்காமல் இருக்கவும் ரேய்க்கி சிசிட்சைப்பெற்றுக்கொண்டு போவார்கள். அவர்களது பெற்றோர்கள் தங்கள் செல்வங்களைப்பற்றிச் சொல்வது;
"மேடம் என் பையனுக்கு படித்ததெல்லாம் மறந்துவிடுகிறது. படிப்பில் புத்தி போகாமல் விளையாட்டாக இருக்கிறான் சீரியெஸ்னெஸ்ஸே இல்லை"
"வீட்லே நன்னாத்தான் ஆன்ஸர் சொல்றான் ஆனா பரீக்ஷை ஹால்லே எல்லாம் மறந்து போயிட்றான்"
இது போன்ற பல பிரச்சனைகள் எடுத்தபடி பெற்றோர்கள் வருகின்றனர். இதெல்லாம் பார்க்கும் போது அவர்களுக்குச் சில அறிவுரைகள் சொல்ல என் மனம் விழைகிறது.
முதலில் பரீக்ஷை எழுதும் முன் மனம் சஞ்சலமில்லாமல் அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் சில நிமிடங்கள் பிராணாயாமம் செய்ய வேண்டும்.
மாணவ-மாணவிகள் பரீக்ஷைக்கு நன்கு படித்து முடித்து விட்டிருப்பார்கள்.இப்போது மேலும் சில அறிவுரைகள் சொல்கிறேன். முதலில் தேக ஆரோக்கியம் முக்கியம் இல்லையா?
ஆகையால் இந்த நாட்களில் கூடிய வரை வீட்டில் செய்யும் உணவுகளையே உட்கொள்ளுங்கள். மிகுந்த எண்ணைப் பண்டமோ fast food எனப்படும் அவசர உணவு,வெளியில் விற்கும் பண்டங்களை சாப்பிடாதீர்கள். சுத்தமான குடி நீரைக் குடியுங்கள். படித்துக் கொண்டே இராமல், மூளைக்குச் சற்று ஓய்வு தேவை. ஓய்வு எடுத்துக்கொள்ளும் நேரத்தில் சற்று நேரம் பிடித்த இசையைக்கேட்டு அனுபவியுங்கள். டென்சன் அல்லது பரபரப்பு வர இடம் கொடுக்காதீர்கள். பரீட்சைக்கு அரை மணி நேரம் முன்னதாகவே அந்த இடத்திற்குப்போய் விடுங்கள். உங்கள் ஆழ்மனதில் நான் நன்கு பரீட்சை எழுதி வெற்றி பெறுவேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.
முதல் நாளிலேயே மறு நாளுக்கு தேவையான எல்லா பொருளும் ரெடியாக எடுத்து வைத்தால், டென்சன் வராது. இப்போது பரீட்சை ஹாலில் அமர்ந்து விட்டீர்கள்; வினாத்தாளும் வந்து விட்டது, ஒரு நிமிடம் மனதில் கடவுளை நினைத்து பிரார்த்தனைச் செய்து பின் படிக்க ஆரம்பியுங்கள்.
கவனமாக முதலிலிருந்து கடைசி வரைப் படியுங்கள். பின் அதிகமான மார்க்கு கேள்விகளை எடுத்து மிகவும் நன்றாக தெரிந்த வினாவிற்கு விடை கொடுங்க. எத்தனைத் தேவையோ அதைத் தான் எழுத வேண்டும் திரும்ப திரும்ப எழுதியதே எழுத வேண்டாம் பின் 5 மார்க வினாக்கள் பின் 2மார்க் பின் ஒரு மார்க் என்று எளிதாக முடித்து விடலாம். மணியைப் பார்த்து விடைகளை முடிக்க வேண்டும். கணக்கில் rough work பரிசோதிக்கும் தாள் தனியாக வைத்து அதற்கு சரியாக நம்பர் போட வேண்டும். பின் அதையும் கணக்கு விடைத்தாளுடன் சேர்த்துக் கொடுகலாம். இவை பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும் கடைசியில் திரும்ப சரிபார்க்க ஒரு பத்து நிமிடம் அவகாசம் தேவை.
காபி அடிப்பது .... ஊஹூம் ...! அதைப் பற்றி நினைத்துகூட பார்க்க வேண்டாம். நேர்மைக்கு பரிசு எப்போதும் உண்டு. அதே போல் பிறர் காப்பி அடிக்க நீங்கள் உதவவும் கூடாது.
இதற்கு ஒரு கதை ,,,,,,,,,
ஒரு தடவை ஸ்ரீ காந்தீஜி பள்ளிக்கு சென்றிருந்தார். அன்று அந்தப் பள்ளிக்கு கலவி அதிகாரி வந்திருந்தார். இவருடைய வகுப்பும் வந்தார். அப்போது ஆங்கிலம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் ஆங்கிலத்தில் சொற்கள் டிக்டேஷன் கொடுத்து கொண்டிருந்தார்.
அவர் சொன்ன ஒரு சொல் கெட்டில் kettle. அதை ஸ்ரீ காந்தீஜி தவறாக எழுதினார். ஒரு பிழை இருந்தது. ஆசிரியர் நடந்து கொண்டு வந்த வேளையில் தற்செயலாய் அந்தப் பிழையைப் பார்த்தார். உடனே ஆசிரியர் செய்கையினால் அடுத்த மாணவனைப் பார்த்து எழுத தூண்டினார். ஆனால் மோஹன் என்ற காந்தீஜி, அதைச் செய்யவில்லை. ஆனாலும் ஆசிரியர் மீது மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளவும் இல்லை. அதைப் பிறரிடம் சொல்லவும் இல்லை. என்ன நல்ல குணம்? மாணவர்களும் அந்தப் பாதையைக் கடைப் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பரீட்சை முடிந்த பின் உத்தேசமாக எத்தனை நன்றாக அவர்கள் தங்கள் வினாத்தாளை செய்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வது அவசியம் பின் ஹாலிலிருந்து தாங்கள் வைத்தப்பொருட்கள் எல்லாம் மறக்காமல் எடுத்து வர வேண்டும். (டிஎன்எஸ்)
Mar 28, 2011
* Do not use semicolon(;)